கொடைக்கானல் படகு அலங்கார போட்டியில் கலக்கிய 'ஜல்லிக்கட்டு காளை'! சுற்றுலா பயணிகள் ஆர்வம்!

 
படகு அலங்காரம்
 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா களைகட்ட்டி வரும் நிலையில் நேற்று படகு அலங்காரப் போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் ஜல்லிக்கட்டு காளை போன்று செய்யப்பட்டிருந்த அலங்காரம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பலரும் ஆர்வமுடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் கடந்த 17ம் தேதி கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கிய நிலையில், தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அறிவிக்கப்பட்டிருந்த தேதியையும் கடந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் மலர் கண்காட்சி தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், நேற்று கொடைக்கானல் ஏரியில் படகு அலங்கார போட்டி நடைபெற்றது. இதில், சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த படகில் ஜல்லிக்கட்டு உருவங்கள் பூக்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தன. தோட்டக்கலைத் துறை படகில் கார்னேஷன் மலர்களால் வாத்து உருவம் அமைக்கப்பட்டிருந்தது.
மீன்வளத்துறை படகில் மீன்வளர்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. இதில் ஜல்லிக்கட்டு காளை அமைக்கப்பட்டிருந்த படகு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. படகு அலங்கார அணி வகுப்பை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்துச் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!