ரெண்டு கைகளையும் இழந்த மாணவர் 437 மதிப்பெண் எடுத்து சாதனை! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

 
க்ரித்திவர்மா

நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.   மொத்தம் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு பொது தேர்வில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 6.5% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 90.7% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், நடப்பாண்டில்  மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது.   மாவட்ட வாரியாக 97.67% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் 83.54% சதவீத தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் வசித்து வருபவர் க்ரித்தி வர்மா. இவர் , 2 கைகளையும் இழந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து தான் படித்த அரசுப்பள்ளியில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருடைய  சாதனைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இது குறித்து க்ருத்தி வர்மாவின் தாய் “தன் மகனுக்கு அரசு உதவ வேண்டும் எனவும், அவனுக்கு கைகள் பொருத்தி நம்பிக்'கை' தந்தால், என் வாழ்க்கையில் நான் வெற்றி அடைந்த மாதிரி" என கணவனின்றி வாழும் க்ரித்தி வர்மாவின் தாய் கஸ்தூரி கண்ணீருடன் பேட்டி அளித்திருந்தார். 

இது குறித்த செய்தி அறிந்த முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில் பதிலை பதிவிட்டுள்ளார். அதில் ” பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள் அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

முதல்வர் க்ரித்திவர்மா
நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்” என உறுதி அளித்துள்ளார். இதன்படி  முதல்வர் ஸ்டாலின் க்ரித்தி வர்மா தாயாரிடம் தொலைப்பேசி வழியாக  பேசி அவரது  வேண்டுதல்களை கேட்டறிந்தார். அப்போது, “நீங்கள் உதவி கேட்டு உள்ளீர்கள். அரசாங்கம் சார்பாக செய்து கொடுக்கிறோம். மாவட்ட ஆட்சியரை அனுப்புகிறேன். உங்களுக்கு அவர் தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்.  உடல்நலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொடுக்கிறேன்” என நம்பிக்கை தெரிவித்தார். முதல்வரின் இந்த நம்பிக்கை வாக்கிற்கு க்ரித்தி வர்மாவின் தாயார் தமது நன்றிகளை அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web