நாளை தமிழகத்தில் 31 மாவட்டங்களில், 113 கோவில்களில் கும்பாபிஷேக விழா!

 
திருச்செந்தூர் கந்தசஷ்டி

நாளை ஜூலை 7ம் தேதி தமிழகத்தில் 113 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், 113 கோவில்களிலும் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது.

திருச்செந்தூர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 176 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நாளை காலை 31 மாவட்டங்களில் 113 கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.

திருச்செந்தூர்

நாளை நடக்கும் கும்பாபிஷேகத்தில் 3,207வது கோவிலாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இது தவிர, கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை இசக்கியம்மன் கோவில், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேசுவர சாமி கோவில், காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில், தென்காசி மாவட்டம் கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சின்னமலை யோக ஆஞ்சநேய சாமி கோவில் உள்பட 113 கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?