குருந்தமலை கோவில் கும்பாபிஷேகம் கோலாகலத் தொடக்கம்!!

 
குருந்தமலை

தமிழகத்தில் கோவை மாவட்டம் காரமடை குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஜூன் 1 ம் தேதி இன்றூ  மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது.  இதன் அடிப்படையில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ராஜ கம்பீர விநாயகர், கன்னிமூல விநாயகர், ஆறுமுக வேலவர், விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், ஆதி மூலவர் அகஸ்தீஸ்வரர், ராஜ நாகலிங்கம், பஞ்சலிங்கேஸ்வரர், கன்னிமார், இடும்பன், கடம்பன் வீரபாகு ஆஞ்சநேயர்  பரிவார தெய்வகளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

குருந்தமலை

பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்த நிலையில்   குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியுள்ளது இதனைத் தொடர்ந்து  கோபூஜை, தன பூஜை, அணுக்கை, மகா கணபதி ஹோமம், தீர்த்த சங்கர கணம், அக்னி சங்கர கணம் பூரணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. காரமடையில் இருந்து திருமுருக பக்தர்கள் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் தாரை தப்பட்டைகள், செண்டை வாத்தியம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர்.

குருந்தமலை

அதைத் தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி மிருதிங்கரணம், அங்கூரார்ப்பணம், ரக்ஷாபந்தனன், கும்ப அலங்காரங்கள் கலா ஆகர்சனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, மண்டப வேதியர்ச்சனை, பூரணாகுதே மற்றும் இரவு உபச்சாரங்கள் தீபாராதனை தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. யாகசாலை நிகழ்ச்சி பாலு மற்றும் விவேக் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் அனைத்தும் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web