ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக அரிய வாய்ப்பு... குஷ்பு தாக்கு!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பிற்பகல் 1 மணி நிலவரப்படி வேகமாக முன்னேறி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களைத் தாண்டும் வகையில் NDA முன்னேறி வருவது, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் சூழலை உறுதிப்படுத்துகிறது. இந்தியா கூட்டணி 111 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து கடுமையான போட்டியை அளித்து வருகிறது.
They show what it takes to win.#CONgress decimated.
— KhushbuSundar (@khushsundar) November 14, 2025
Yet another one more reason and an opportunity for @RahulGandhi to quit politics. #NDA4Bihar pic.twitter.com/yJd7gT5Q1l
இந்நிலையில், பீகார் தேர்தல் நிலவரம் தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு சுந்தர் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதீஷ் குமார் இணைந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது; ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக இன்னொரு வாய்ப்பும் காரணமும் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மற்றொரு பதிவில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியைப் பெற்றுவிட்டது; சில தலைவர்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள். மக்களுக்கு ஆற்றிய சேவையே அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளது” எனக் கூறிய குஷ்புவின் பதிவுகள் அரசியல் வட்டாரங்களில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
