பெண் போலீஸை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த உளவுத்துறை அதிகாரி.. பகீர் பின்னணி!

 
பெண்

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள மிராஜ் நகரில் கவுரவ் அவலே(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும்போதே அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். அப்போது 29 வயதான அப்பெண் காவலராக உள்ளார். 

சில ஆண்டுகளுக்கு  பின் தோழியான அந்த பெண் காவலரை கவுரவ் அவலே சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் பழகிவந்துள்ளனர். அப்போது, தன்னை உளவுத்துறை அதிகாரி என்று கூறிய அவலே, அந்த பெண் காவலரைத் திருமணம் செய்து கொள்வதாகக்  கூறி அடிக்கடி சந்தித்துள்ளார். அத்துடன் நெருங்கிப் பழகி பெண் காவலருடன் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் உல்லாசமாக இருந்துள்ளார். அந்தவகையில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.

பெண்

மேலும், அந்த பெண்ணிடமிருந்து சுமார் 130 கிராம் தங்கத்தைப் பெற்றதுடன், இருவரும் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவோம் எனக்கூறி பெண் காவலரிடமிருந்து 47 லட்ச ரூபாயையும் கவுரவ் அவலே வாங்கியுள்ளார்.

ஒருகட்டத்தில் அவாலேவை பெண் காவலர் உடனான தொடர்பை துண்டிக்கத்தொடங்கினார். அத்துடன் பணத்தையும் தரமறுத்ததுடன் வெளியில் இந்த விஷயத்தைக் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து மும்பையில் உள்ள நாக்பாடா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகார் அளித்தார்.

பெண்

அதன் அடிப்படையில் கவுரவ் அவலே மீது 376 (பலாத்காரம்), 170 (அரசு ஊழியரைப் போல் நடித்தல்), 420 (ஏமாற்றுதல்) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து எஸ்கேப்பான அவலேயை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web