சதுரகிரியில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... நாளை வரை மலையேற அனுமதி!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில், ஆடி பிரதோஷம் மற்றும் ஆடிப்பெருக்கு, அமாவாசை தினங்களை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 5ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று தரிசிக்க அனுமதி உண்டு. இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று வனத்துறை அறிவித்துள்ளது. மேலும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்லவோ, மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கவோ அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
