நாளை குடமுழுக்கு விழா.. திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

 
திருச்செந்தூர்
 

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை ஜூலை 7ம் தேதி காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை காலை எட்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் ஒன்பதாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட்டி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் இருந்து ஆச்சார்ய விசேஷ சந்தி பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஆச்சார்யார்கள் மேளதாளங்கள் முழங்க யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

தொடர்ந்து, யாகசாலையில் பூஜைகள் தொடங்கியது. அங்கு திரவ்யாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையாகி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. யாக சாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாகசுர இன்னிசையும், பெண் ஓதுவார்கள் உள்பட 108 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெற்றது.

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவில் நேற்று காலை நடைபெற்ற எட்டாம் கால யாகசாலை பூஜைகள். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவில் நேற்று காலை நடைபெற்ற எட்டாம் கால யாகசாலை பூஜைகள். யாகசாலை பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?