ஐஸ்வர்யம் பெருக லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்... !!

 
லட்சுமி குபேர பூஜை

லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடும்
 நாளை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நன்னாளில் நம் பூஜையால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.  அதில் மிக முக்கியமான பூஜை லட்சுமி குபேர பூஜை. இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள். லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடுவதே லட்சுமி குபேர பூஜை.    

காசு செல்வம் மகாலட்சுமி பூஜை

தீபாவளி பண்டிகை அன்று எண்ணெய்க் குளியலும் மிக முக்கியமே.  வருடத்தில் அன்று ஒரு நாள்  மட்டுமே நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், சீயக்காய்ப் பொடியில் சரஸ்வதியும், தண்ணீரில் கங்கையும், சந்தனத்தில் பூமா தேவியும், குங்குமத்தில் கௌரியும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் ஆவாஹனமாகி  இருப்பதாக ஐதிகம். எனவே தான் தீபாவளி எண்ணெய்க் குளியல் புனிதமானதாக கருதப்படுகிறது.  
தீபாவளி நாளில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் அல்லது காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளலாம்.   தீபாவளி நாளில் செய்யும் எண்ணெய் குளியல் நீராடலை 'கங்கா ஸ்நானம்' என புனிதமாகச் அழைக்கின்றனர். 

நாளை சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் இது தான்!

தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்‌ :
அதிகாலை 04.00 மணி முதல்‌ 06.00 மணி வரை ஆகும்
காலை 09.13 மணி முதல்‌ 10.43 மணி வரை
பிற்பகல்‌ 01.13 மணி முதல்‌ 01.28 மணி வரை
மாலை 06.00 மணி முதல்‌ 07.00 மணி வரை
இரவு 08.00 மணி முதல்‌ 09.00 மணி வரை
லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web