லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகல்!

 
லாலு பிரசாத் யாதவ்

243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 121 தொகுதிகள் முதற்கட்டமாகவும், 122 தொகுதிகள் இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்ற வாக்குப்பதிவின் எண்ணிக்கை நேற்று முடிவடைந்தது.

இதில், பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதேசமயம், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளம் (RJD) கட்சி எதிர்பாராத வகையில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

தோல்விக்கு இடையில், RJD நிறுவனரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, தனது எக்ஸ் (X) தளத்தில்
“அரசியலில் இருந்து விலகுகிறேன்” என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அவருடைய பதிவில், “அரசியல் மட்டுமல்ல, என் குடும்பத்திலிருந்தும் விலகி இருக்கிறேன்” “இதனை செய்யும்படி சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் என்னிடம் கேட்டனர்” “எல்லா பழிகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஏற்கனவே, லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் RJD-யில் இருந்து விலகி தனியாக கட்சி நடத்தி வருகிறார். தற்போது ரோகிணி ஆச்சார்யாவும் அரசியலிலிருந்து, மேலும் குடும்பத்திலிருந்தும் விலகல் அறிவித்ததால் யாதவ் குடும்பத்தில் உள்ள உள்கட்டமைப்பு பிரச்சினை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பீகார் அரசியலில் இதனால் எவ்வாறு மாற்றங்கள் ஏற்படும் என்பது கவனிக்கப்படுகின்றது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!