பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்... 4 பேர் பலி; 32 பேர் படுகாயம்!
பாகிஸ்தானில் நடைபெற்ற கண்ணிவெடி தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் டர்பெட் நகரில் நேற்று பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பேருந்தில் 36 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த பேருந்தில் பலூசிஸ்தானை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணித்தனர்.
இந்நிலையில் நியூ பஹ்மென் பகுதியில் அந்த பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது, பேருந்தைக் குறி வைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பேருந்தில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்த தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும் கண்ணிவெடி தாக்குதலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்தினரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!