அமர்நாத் யாத்திரையில் நிலச்சரிவு... பெண் உயிரிழப்பு.. 3 பேர் பலத்த காயம்!

 
அமர்நாத்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், காண்டல்பர் மாவட்டம் அமர்நாத்தில் பனி லிங்கத்தை தரிசிக்க பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரையின் பால்டல் பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் பரிதாபமாக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

நிலச்சரிவைத் தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகள் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஜம்மு காஷ்மீரில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் இசட் மோடில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பால்டல் பாதையில் கீழ்நோக்கி யாத்திரையை மேற்கொண்ட யாத்ரீகர்கள் மீது மண் சரிந்து புனித குகைக்கு அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பெண் யாத்ரீகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

அமர்நாத்

மேலும் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு பால்டல் பாதைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் உயிரிழந்த பெண் யாத்ரீகர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தாரா ராம் மனைவி சோனா பாய் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அமர்நாத்

திடீர் நிலச்சரிவு குறித்து காஷ்மீர் பிரிவு ஆணையர் விஜய் குமார் பிதுரி கூறுகையில், “தொடர் கனமழை காரணமாக தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஆகையால் 2 அடிப்படை முகாம்களில் இருந்து இன்று புனித குகை நோக்கிச் செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது. இருப்பினும் நேற்றைய இரவு பஞ்ச்தர்னி முகாமில் தங்கியிருந்த யாத்ரீகர்கள் மட்டும் மலைமீட்புக் குழுவுடன் பால்டலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இன்று பகலில் நிலவும் வானிலையைப் பொறுத்து, நாளை அமர்நாத் யாத்திரைக்கு யாத்ரீகர்களை அனுமதிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்”  தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?