வாகன ஓட்டிகள் பத்திரம்... கனமழை... மலைப்பாதையில் மண்சரிவு... மரங்கள் முறிவு!

 
மரம் சரிவு
 

 


தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மேலும் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் கடந்த ஒரு வார காலமாகவே பரவலான மழை பெய்து வருகிறது. உதகையில் சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது.

மண்சரிவு

தொடர்விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்திருந்த நிலையில், மழைக் காரணமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

குன்னூர் நகர பகுதி மட்டுமல்லாமல் அருவங்காடு, வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கரன்சி, காட்டேரி, பர்லியார், சேலாஸ், கொலக்கம்பை உட்பட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே திடீர் மண் சரிவு ஏற்பட்ட நிலையில் சாலையில் மரங்களும் முறிந்து கீழே விழுந்தன.

உத்தரபிரதேச போலீஸ்

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் குன்னூர் டி.எஸ்.பி. வீரபாண்டி, ஆய்வாளர் சதீஷ் மற்றும் தீயணைப்புத் துறையினர் அடங்கிய குழுவினர் ஜேசிபி இயந்திர உதவியுடன் மண் மற்றும் மரங்களை அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்கா, அடார் செல்லும் சாலையிலும் ராட்சத மரம் மின் கம்பி மீது விழுந்தது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேரம் போராடி மரத்தை அகற்றினர். 

இதேபோல் ஆங்காங்கே மழைக்கு மரங்களும், மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நேரங்களில் மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மிதவேகத்தில் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் என வருவாய்த்துறையினர், போலீசார் தெரிவித்தனர்.

இன்று காலை நிலவரப்படி கிண்ணக்கொரையில் அதிகபட்சமாக 51 மி.மீ., மழை பதிவானது. கெத்தை 46, பாலகொலா 43, குந்தா 37, பர்லியாறு 35, கோடநாடு 34, குன்னூர் 30, கோத்தகிரி 22, கோத்தகிரி 18, அவலாஞ்சி 15, எமரால்டு 18, சேரங்கோடு 17, கேத்தி 16, எடப்பள்ளி 14, கீழ் கூடலூர் 12, ஓவேலி 11, நடுவட்டம் 10, அப்பர் பவானி 9, தேவாலா 9, பந்தலூர் 9, பாடந்தொரை 8, செருமுள்ளி 7, உலிக்கல் 7, கிளன்மார்கன் 7, உதகை 3.2 மி.மீ., மழை பதிவானது.

மழைக்காலங்களில் மிதமான வேகத்திலேயே வாகனங்களை இயக்கவும். அதிவேக பயணம் ஆபத்தானது. மலைப்பகுதிகளில் செல்வதைக் கூடுமனாவரை தவிர்க்கவும். மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகளை தனியே வெளியே அனுப்பாதீங்க.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!