தண்டவாள பாதையில் திடீர் மண்சரிவு... தென்மாவட்ட ரயில்கள் தாமதம்!

பராமரிப்பு பணிகளின் போது, திடீரென தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாமதமாக சென்றடைந்தன.
திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்திற்கு அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக விழுப்புரம் - அரியலூர் வழித்தடத்தில் செல்லும் பயணிகள் ரயில், பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை கன்னியாகுமரி அகலரயில் பாதையில், அரியலூர் மாவட்டம் வெள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்திற்கு அடியில் சுரங்கப் பாதை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் இன்று காலை லேசான மண்சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து அரியலூர் வழியாக திருச்சிக்கு செல்லவிருந்தது பயணிகள் ரயில், வெள்ளூர் ரயில் நிலையத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் செந்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்சரிவு ஏற்பட்ட இடம் சமன் செய்யப்பட்டது. இதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வெள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலும், செந்துறை ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் குறைவான வேகத்தில் ரயில் பாதையில் இயக்கப்பட்டது. தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புடன் சுரங்கப்பாதை அமைக்கப் பணியும் நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!