1981ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் பல்கலைகழக மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்க!
சென்னைப் பல்கலைகழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 1981-82ம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் படித்து, இன்னும் ‘அரியர்’ வைத்திருக்கும் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இளங்கலை, முதுகலை, பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ்., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் தேர்ச்சி பெறாமல் மீதமுள்ள பாடங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன.
தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் [www.ideunom.ac.in](http://www.ideunom.ac.in) என்ற இணையதளம் மூலம் வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி பல்கலைகழகம் அறிவுறுத்தியுள்ளது.

காலக்கெடு உள்ளடங்கிய இந்த அறிவிப்பு, நீண்டகாலமாக அரியர் காரணமாக பட்டம் பெற முடியாமல் தவித்த மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பல்கலைகழகம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
