லியாண்டர் பயஸ் தந்தை காலமானார்.. ஆக.18ல் இறுதி சடங்குகள்... ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்!

 
லியாண்டர் பயஸ்

ஹாக்கி விளையாட்டில் இந்தியாவுக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றவர், முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும், பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தையுமான வெஸ் பயஸ், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. இ

1972 மியூனிக் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்ற அணியின் முக்கிய வீரராக பயஸ் விளங்கினார். பயஸ் பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவின் உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

லியாண்டர் பயஸ்

1971ம் ஆண்டு பார்சிலோனா ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வென்ற வெண்கலப் பதக்க அணியிலும் பயஸ் இடம் பெற்றிருந்தார். இந்திய ஹாக்கி அணியில் ஒரு திறமையான மிட்ஃபீல்டராக விளையாடிய இவர், கால்பந்து, கிரிக்கெட், ரக்பி உள்ளிட்ட பல விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். 

வெஸ் பயஸ், முன்னாள் இந்திய கூடைப்பந்து வீராங்கனை ஜெனிஃபரை திருமணம் செய்தார். இவரது மறைவு குறித்து  குடும்பத்தினர்  வெளிநாடுகளில் வசிக்கும் மகள்கள் இருவரின் வருகைக்காக காத்திருக்கிறோம். அவர்கள் வந்து சேர்ந்ததும், அவரது இறுதி சடங்குகள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் எனக் கூறியுள்ளனர்.  

லியாண்டர் பயஸ்

அவரது மகன் லியாண்டர் பயஸ்,  18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (8 ஆண்கள் இரட்டையர், 10 கலப்பு இரட்டையர்) வென்றவர். இந்தியாவின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த டென்னிஸ் வீரராக மதிக்கப்படுகிறார். 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் அவர் பெற்ற ஆண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கம், பயஸ் குடும்பத்தின் ஒலிம்பிக் பதக்கம் பாரம்பரியத்தை தொடர வைத்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?