வெயிலுக்கு லீவு... சென்னையில் பல இடங்களில் கொட்டித் தீர்த்த மழை! மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 
rain

தமிழகத்தில் கடந்த  சில தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த மழை இன்றும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது.

Two Women walked in rain with umbrella

இதன் அடிப்படையில் இன்று மே 1ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம்,  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .  இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது.  தமிழகத்தின் தலைநகரமாம்  சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

school rain

இதன்படி தற்போது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம் , பல்லாவரம், குரோம்பேட்டை, அசோக் நகர், கோயம்பேடு, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் கோடை மழையை உற்சாகமாக கொண்டாடத் தொடங்கியுள்ளனர். , தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web