இல்லத்தரசிகள் உற்சாகம்... எலுமிச்சை விலை சரிவு.!

 
எலுமிச்சை


கோடை காலம் முடிவுக்கு வந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. வெயில் காலங்களில் பழச்சாறு, ஜூஸ், சர்பத்,  சோடா, கரும்புச்சாறு வகைகளில் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுப்பர். இதனால் கோடை முடியும் வரை எலுமிச்சையின் விலை உச்சத்தில் இருக்கும். தற்போது விளைச்சல் அதிகரித்த நிலையில் எலுமிச்சை விலை சரிவை சந்தித்துள்ளது.

எலுமிச்சை

அந்த வகையில்  தஞ்சை மாவட்டத்தில் எலுமிச்சை பழம் வரத்து அதிகரிப்பால் இதன் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  எலுமிச்சை என்பது எல்லா காலத்திலும் கிடைக்கும் ஒரு பழம் என்றாலும் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகிறது.

எலுமிச்சை

குளிர்பானங்களிலும், ஊறுகாய் செய்யவும்  அதிக அளவில்  பயன்படுத்தப்படுகிறது. இதுவரை கிலோ ரூ 200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் வரை கிலோ ரூ100 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்து தற்போது கிலோ ரூ60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web