லியோ 7 மணி காட்சி ரத்து... விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!!

 
லியோ

லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன்  கொண்டாட்டத்தை ஏற்கனவே தொடங்கி விட்டனர். படம் பார்க்க தயாராகி வரும் நிலையில் படம் வெளியாவதில் அடுத்தடுத்து சர்ச்சைகளும், பிரச்சனைகளும் எழுந்து வருகின்றன.  

லியோ

இந்நிலையில் காலை 4 மணிக்கு ரசிகர் காட்சி திரையிட அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும்  சிறப்பு காட்சிகள் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்கவும்   படத் தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.

லியோ

ஆனால் அரசாணைப்படி அதிகாலை 4 மணி காட்சியும் ரத்து , காலை 7 மணி காட்சியும் ரத்து  எனத் தெரிவித்துள்ளது.   மேலும் அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தொடர்ந்து  5 நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 1:30 மணி வரை  தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்துள்ளது.  தமிழக அரசின் இந்த அதிரடி முடிவால் விஜய் ரசிகர்கள் மிகுந்த பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web