”லியோ” வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது... அதிரடி அறிவிப்பு!!

உலகம் முழுவதும் இளையதளபதியின் லியோ திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவான இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம்வாசுதேவ் மேனன், மடோனா, சாண்டி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் 12 நாட்களில் உலக அளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நாளை நவம்பர் 1 ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்த 'லியோ' பட வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்வில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. அதே நேரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 6000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.இதில் கலந்து கொள்ள ஆதார் அவசியம் எனவும் படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!