லியோ’ வெற்றிவிழாவுக்கு நேரு ஸ்டேடியத்தில் அனுமதி! ரசிகர்கள் உற்சாகம்!

 
லியோ

ஒவ்வொரு முறையும் விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும் போது கூடவே பிரச்சனைகளும் ரவுண்ட் கட்டி கிளம்புவது வழக்கமானதாகிவிட்ட நிலையில், ‘லியோ’ படத்திற்கு படப்பிடிப்பு கிளம்பியதில் இருந்தே பிரச்சனைகள் எழுந்தது. டீஸர் ரிலீஸ், ஆடியோ ரிலீஸ் என்று தொடர்ந்து அரசு முட்டுக்கட்டைப் போட்டு வந்ததாக எதிர்கட்சிகள் மேடைகளில் பேசும் அளவுக்கு பிரச்சனைகள் தீவிரமடைந்தது. இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி 'லியோ’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு அனுமதி கேட்ட நிலையில், மீண்டும் இழுபறியானது விவகாரம்.

முன்னதாகவே கேட்கவில்லை என்று இழுபறியான நிலையில், தற்போது கட்டுப்பாடுகளுடன் அனுமதி கிடைத்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நேற்று இதே நேரு ஸ்டேடியத்தில் நடிகர் கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தின் நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. 

‘லியோ’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நவம்பர் ஒன்றாம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இங்கேதான் முன்பு இசை வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிட்டு பின்பு ரத்தானது. ரத்தான இடத்திலேயே மீண்டும் படத்தின் வெற்றி விழா நடக்கிறது என ரசிகர்கள் உற்சாகமாக இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

’லியோ’ திரைப்படத்தில் நடிகர் விஜய்

கடைசி நேர பரப்பில், கார்த்தி படவிழாவிற்கெல்லாம் அனுமதி அளித்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்தார்கள். தற்போது, ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவிற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது. 200-300 கார்களுக்கும், அரங்கில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரசிகர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.

‘லியோ’

மேலும், பேருந்துகளில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்திலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web