பகீர் வீடியோ... நடுரோட்டில் டூவீலர் மீது மோதிய சிறுத்தை... அலறிய இளைஞருக்கு எலும்பு முறிவு!

 
சிறுத்தை

கர்நாடகா மாநிலத்தில் ராமநகரா-மகடி சாலையில் இளைஞர் ஒருவர் தனது புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் சென்றுக் கொண்டிருந்த போது, நடுரோட்டில் திடீரென சிறுத்தை ஒன்று குறுக்கே புகுந்து டூ வீலரில் மோதியுள்ளது. திடீரென நடுரோட்டில் சிறுத்தையைக் கண்ட இளைஞர் பயத்தில் வண்டியை கைவிட, விபத்துக்குள்ளாகி உள்ளார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிறுத்தையின் வயிற்றின் மீது புல்லட் ஏறியதில் சிறுத்தையும் படுகாயமடைந்தது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

கர்நாடகா மாநிலம் குதூர் பகுதியைச் சேர்ந்த குமார் எனும் இளைஞர் தனது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் ராமநகரா-மகடி சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென சாலையைக் கடந்த சிறுத்தை மீது மோதியுள்ளார். இதில் குமாருக்கு கால் உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. டூ வீலரில் மோதி காயமடைந்த சிறுத்தைக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறுத்தை


சவனதுர்கா வனப்பகுதியின் ஜோடுகட் பகுதியில் ராமநகர-மகடி பிரதான சாலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த வழியே ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்த குட்டஹள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் இந்த விபத்து குறித்து அவசர சேவைக்கு தகவல் கொடுத்தார். குமாருக்கு மாகடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் ஊர்ந்து சென்றதாக வனச்சரக அலுவலர் சைத்ரா தெரிவித்ததையடுத்து, வனவிலங்கு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அதை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web