அரசு கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம்!

 
சிறுத்தை

கோவை மாவட்டத்தில்  வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரி சாலையில் சிறுத்தை நடமாடி வருவதாக தெரிகிறது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருப்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டத்தில்  வால்பாறையில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 சிறுத்தை

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு  வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரி முன் பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து வந்தது. அப்போது அங்கு அதிகாலை வேளையில் நடை பயிற்சிக்கு வந்தவர் சிறுத்தை நிற்பதை பார்த்து அருகில் உள்ள கடையின் மேல் ஏறி உயிர்த்தப்பினார்.  தன்னுடைய செல்போனில் சிறுத்தை நடமாடுவதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது  இந்த வீடியோ வெளியாகி வால்பாறை பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  

சிறுத்தை

அதிகாலை வேளையில் சிறுத்தை ஒன்று கல்லூரி முன்பு நடமாடியதால் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து பிடித்து காட்டில் விட வேண்டும், மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வால்பாறை பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web