உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க தினமும் சில மணி நேரங்கள் சைக்கிள் ஓட்டுவோம்!!

 
சைக்கிள்

போன தலைமுறை வரை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு எளிதாக சென்று வர வீடுகளில் சைக்கிள் தான் பயன்பாட்டில் இருந்து வந்தது.  பள்ளிகள், அலுவலகங்கள், கடைகளுக்கு செல்பவர்கள், வியாபாரிகள் வரை எதற்கெடுத்தாலும் சைக்கிள் பயணம் தான். பெட்ரோல் , டீசல் விலையேற்றம் போக்குவரத்து நெரிசல் என எந்த தொல்லையும் கிடையாது. சைக்கிளை எடுத்தோமா, ஹாயாக நினைத்த இடத்திற்கு சென்று வந்தோமா என்று எளிமையான வாழ்வையே வாழ்ந்தனர். நாகரீக, தொழில் நுப்ட வளர்ச்சியால் பள்ளி மாணவர்கள் கூட டூவீலர் ஓட்டுவதையே விரும்புகின்றனர். தற்போது சைக்கிள் போக்குவரத்து சாதனத்திலிருந்து உடற்பயிற்சி சாதனமாக மாறிவிட்டது. ஆனால் சைக்களில் சென்று வந்த காலம் வரை உடல் ஆரோக்கியம் சீராக இருந்து வந்தது.

குறைந்த நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை குறைக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். இதன் முக்கியதுவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும்  ஜூன் 3ம் தேதி 'உலக மிதிவண்டி தினம்' கொண்டாடப்படுகிறது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு சைக்கிள் நாளாக அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்டு பரப்புரை செய்தார்.

சைக்கிள்
அவரது முயற்சிக்கு துருக்மெனிஸ்தான் உட்பட 56 நாடுகள் ஆதரவளித்தன.  சைக்கிள் மனித இனத்திற்குச் சொந்தமானது எனவும்,  சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு சாதனம் என்பதே இப்பரப்புரையின் முக்கிய நோக்கமாக கொள்ளப்பட்டது. கடந்த 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக  பயன்பாட்டில் இருந்த சைக்கிளின் தனிச்சிறப்பு, பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத கருவி என்பதையும் முழுவதும் ஐநா ஏற்றுக் கொண்டது. இதன் பிறகு 2018 ஏப்ரல் 12ம்  தேதி  ஜூன் 3 ம் தேதியை உலக சைக்கிள் தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐநா பொதுச் சபையின் 193 உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. தற்போதைய பயன்பாட்டிலிருக்கும்  கார், பைக், பேருந்து அனைத்துமே இயற்கைக்கு எதிரானவை. 

சைக்கிள்
சைக்கிள் தான் சுற்றுச்சூழல், இயற்கைக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி நமக்கான காரியத்தையும் செய்து முடிக்க உதவுகிறது.  வயது, பாலினம் என்று எந்த வித்தியாசமும் இன்றி சைக்கிளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கலாம்.  17ம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த கோம்டி மீடி டீ ஷிவ்ராக்  2 மரத்துண்டுகளை வைத்து  சைக்கிளுக்கு உருவம் கொடுத்தார்.  அதன் பிறகு அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, 1791ம் ஆண்டு மரச் சைக்கிள் ஒன்றை உருவாக்கினார் கோம்டி. இந்த சைக்கிளுக்கு பெடல்கள் கிடையாது. காலால் தரையை உந்தித் தள்ளி தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.   உலக மிதிவண்டி தினமான இன்று வீட்டில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளை சுத்தம் செய்து சில மணி நேரங்கள் ஓட்டுவோம். உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web