குழந்தை தொழிலாளர் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றிடுவோம்... ஸ்டாலின்!

 
குழந்தை தொழிலாளர்

 தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக 40 இடங்களிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. நாளை ஜூன் 12ம் தேதி புதன்கிழமை குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ” தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றிடுவோம், அவர்கள் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றிடுவோம். உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12ம் நாள் “குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கல்வி, ஆடல், பாடல், விளையாட்டு என்று வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தைப் பருவத்தில், சில குழந்தைகள் தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் உழைக்கின்றனர். இது மிக மிக  கொடுமையான செயலாகும்.

குழந்தை தொழிலாளர்
இதனால் அவர்களது எதிர்காலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கக் கூடியதாகும். நல்ல குடிமக்களாக உருவாக வேண்டிய குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே தொழிலாளர்களாக மாறுகின்றனர்.  இதன் விளைவால் ஒரு நாடு தனது சமூக வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், அமைதி, சமூகத்தின் சமச்சீர் தன்மை மற்றும் ஆற்றல் மிக்க மனித வளத்தையும் இழக்க நேரிடுகிறது என பதிவிட்டுள்ளார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web