பீடி,சிகரெட் விற்பனைக்கு லைசன்ஸ் கட்டாயம்!!

 
அம்மாடியோவ்! கொரோனா காலத்திலும் சாதனை படைத்த சிகரெட் விற்பனை!

புகைப்பிடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு, புகை நமக்கு பகை என பல வாசகங்கள் சிகரெட் மீது பதிக்கப்பட்டிருந்தாலும் சிகரெட் பிடிப்பவர்கள் அதனை குறைப்பதோ விடுவதோ கிடையாது. தொடர்ந்து புகைப்பிடிப்பதால் நுரையீரல் இல்லாமலே போய் விடும் என எச்சரிக்கை விடுக்கின்றனர் மருத்துவர்கள்.  இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பீடி, சிகரெட் விற்க உரிமம் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது புகை பிடிக்காதீர்கள் என்ற வாசகம்  சிகரெட் பாக்கெட் முதல் திரையரங்கம் வரையில் இடம்பிடிக்கிறது. ஆனால் தீங்கை ஏற்படுத்தும் என கூறும் எச்சரிக்கை வாசகங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டே தான்  புகைப்பவர்கள் புகைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சிகரெட்

புகைப்பிடிப்பதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரிழந்தாலும், பீடி, சிகரெட்களை புகைத்து தன்னையும், தன்னை சுற்றியவர்களையும் பலி கொடுத்து வருகின்றனர் புகைப்பிடிப்பவர்கள்.  வயதானவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என தொடங்கிய சிகரெட் தற்போது பள்ளி , கல்லூரி மாணவர்கள் வரையும் சிறுமிகள், பெண்கள் வரை அனைவரும் புகை விட்டு உயிருக்கு உலை வைத்து கொள்கின்றனர் . இதனால் ஆஸ்துமாவில் ஆரம்பித்து நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் அடைப்பு, வாய் புற்றுநோய் வரையில் பலநோய்கள் புகைப்பதால் வருகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவர்கள். இந்தியாவை பொறுத்தவரை அடுத்த  10 ஆண்டுகளில் இந்தியாவில் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதத்துக்கு  அதிகமானோர் சிகரெட், பீடி, புகையிலையால் தான் உயிரிழப்பர் என  புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.மத்திய, மாநில அரசுகள் புகையிலை விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கையை மேற்கொள்கின்றன.

சிகரெட்

அந்த வகையில் இது குறித்த  வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதனை ஏற்று உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஜாா்க்கண்ட் சில மாநிலங்கள் பீடி, சிகரெட்களை விற்பதற்கு மட்டும் தனி உரிமம் வழங்கப்படுகிறது. இந்த விதிமுறை தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பெட்டிக் கடைகள், சிறிய மளிகை கடைகள், தேநீர் கடைகளில் விற்பனை செய்யப்படும்  பீடி, சிகரெட்கள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி  இனி பீடி, சிகரெட்களை விற்க வேண்டும் என்றால் அதற்கான உரிமத்தை பெற வேண்டும் என்ற விதிமுறையை சுகாதாரத்துறை அமலுக்கு கொண்டு வருகிறது. 
வழிகாட்டு நெறிமுறைகள்:
சிகரெட், பீடி, புகையிலை விற்பனை செய்யும் கடைகளில் குழந்தைகள் மிட்டாய், நொறுக்கு தீனி, மளிகைப்பொருட்கள், டீ,  காபி , சிற்றுண்டி விற்பனை செய்யக்கூடாது. சிறுவர்கள், குழந்தைகள் மத்தியில் புகைப் பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில் வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னா் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான உரிமங்கள் வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் பீடி, சிகரெட் விற்பனையை குறைக்க முடியும் என மத்திய மாநில அரசுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web