கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டணை, ரூ10,00,000 அபராதம்... சட்டப்பேரவையில் தீர்மானம்!

 
சட்டப்பேரவை

 கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. அதே நேரத்தில் நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில்  விஷசாராய வழக்கு தொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவைஇதற்கு  பதிலளித்த முதல்வர்  முக.ஸ்டாலின், "உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லாததே இதற்கு காரணம். இனி இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டணைகள் கடுமையாக்கப்படும் அந்த வகையில்  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்" என தெரிவித்திருந்தார்.

மரணம் கள்ளச்சாராயம்

 இன்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்தார். அதன்படி, கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபாராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web