அரசு குடியிருப்பு வளாகத்தில் திடீரென பழுதான லிப்ட்...கீழே இறங்க முயன்றவர் உயிரிழந்த சோகம்!

 
லிப்ட்

நடுவழியில் லிப்ட் நின்றும், லிப்ட் ஆபரேட்டர் உதவிக்கு அழைக்கப்பட்டும் ஒரு உயிரைக் காப்பாற்றாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். லிப்ட்டில் இருந்து வெளியே வர லிப்ட் ஆபரேட்டர் ஆலோசனை கூறி காப்பாற்றி இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அலட்சியத்தால் பறிபோனது ஒரு குடும்பத்தலைவனின் உயிர். கள்ளச்சாராய மரணத்தை விட இது கொடுமையானது. நிவாரண நிதியும் அந்த குடும்பத்திற்கு கிடைக்கப்போவதில்லை. ஒரு குடும்பத்தின் எதிர்காலம் பலரது அலட்சியத்தால் இருளில் புதைந்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் நகர்புற மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு இ பிளாக்கில் 8வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கணேசன் (60). இவர் கே.பி.பார்க் அலுவலகம் அருகே டிபன் கடை நடத்தி வந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

இந்த நிலையில், இன்று மாலை வழக்கம் போல, டிபன் கடை வியாபாரத்தை தொடங்க வீட்டில் இருந்து அவர் புறப்பட்டுள்ளார். 8வது மாடியில் இருந்து லிப்டில் ஏறிய கணேசன் தரை தளத்துக்கு வந்துள்ளார். அப்போது லிப்ட் திடீரென பழுதாகி 7வது மாடியில் பாதியில் நின்றது. இதையடுத்து, கணேசன் கூச்சலிட்டார். 

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் லிப்ட் ஆப்பரேட்டர் சாமுவேலை வரவழைத்தனர். அவர் பாதியில் நின்று கொண்டிருந்த லிப்ட்டின் கதவை திறந்தார். பின்னர், லிப்டில் இருந்து கணேசனை கீழே இறங்குமாறு அங்கிருந்தவர்கள் அறிவுறுத்தனர். பயத்தில் லிப்டில் இருந்து முதலில் இறங்க மறுத்த கணேசன், பின்னர் தைரியத்தை வரவழைத்து கீழே இறங்க முயற்சித்தார். 

லிப்டை பிடித்துக் கொண்டு, காலை கீழே தொங்கவிட்டப்படி, கணேசன் கிழே இறங்கினார். அப்போது, கணேசன் அவரது காலை லிப்ட்டின் உள் பக்கம் விட்டபடி கீழே இறங்கி உள்ளார். இதனால், அவர் லிப்டின் உள்பக்கமாக 7 மாடியில் இருந்து தரை தளத்தில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Pulianthope PS

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புளியந்தோப்பு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web