அட்ரா சக்க!! குறைந்த எடையில் துரு பிடிக்காத சிலிண்டர்!!

 
சிலிண்டர்

சமையல் எரிவாயு சிலிண்டரை பொறுத்தவரை இல்லத்தரசிகளின் முதல் புகாரே தூக்கவே சிரமமா இருக்கு. துருப்பிடிச்ச சிலிண்டரா இருக்கறதால வெடிச்சிருமோன்னு பயமா இருக்கு. டெலிவரி பாய் கிட்ட கேட்டா எல்லாம் புதுசு தான். செக் பண்ணியாச்சு போம்மா என்கிறான்.  சின்னதா  எடை குறைவா இருந்தா வேணும் போது கனெக்ட் பண்ணிக்கலாம். இப்போதெல்லாம் தனிக்குடும்பங்கள் பெருகி விட்ட இக்காலத்தில் சிறிய வகை சிலிண்டரே தாராளமாக போதும் என்பது தான் பலரின் புலம்பல். இவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் , டீசல்,  சமையல் எரிவாயு விலைகளை  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

சிலிண்டர்

இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை அங்கீகரிக்கப்பட்ட மொபைல் மூலம் புக் செய்து கொள்ளலாம். இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம்போசிட்' சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிலிண்டர் பாலிமர் பைபர் கிளாஸ், அதிக அடர்த்தி வாய்ந்த பாலி எத்திலின் தெர்மோ பிளாஸ்டிக்காலான வெளிப்புற ஜாக்கெட் மூலம் கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உறுதித்தன்மை கொண்ட இந்த சிலிண்டர், வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர்

அத்துடன், தற்போது பயன்பாட்டில் உள்ள இரும்பிலான உருளையை ஒப்பிடுகையில் இந்த சிலிண்டர் 50 சதவீதம் எடை குறைவாக இருப்பதால் மிக எளிதாக கையாளலாம். அதனை தூக்க சிரமம் கொள்ளத் தேவையில்லை. பெண்களே இந்த சிலிண்டரை எளிதாக கையாள முடியும். இந்த சிலிண்டர் துருப்பிடிக்காது. இப்புதிய சிலிண்டரை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 பாதுகாப்பு வைப்புத்தொகையாக (செக்யூரிட்டி டெபாசிட்) செலுத்த வேண்டும். பழைய வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய காப்புத்தொகையுடன், புதிய பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அத்தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. புதிய சிலிண்டர்களை பெற முன்பதிவு செய்ய 8655677255 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த புதிய அறிவிப்பால் இல்லத்தரசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web