கள்ளச்சாராய உயிர்பலி 14ஆக உயர்வு... டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்!

 
டாஸ்மாக்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில், டாஸ்மாக் கடையையும், பாரையும் அந்த பெண்கள் சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே புதுச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையும், கடையுடன் இணைந்த பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த கடை தொடங்கியது முதலே அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள், கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். டாஸ்மாக் கடை அந்த பகுதியில் திறந்ததால், பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக தொடர்ந்து அந்த பகுதி மக்கள், கடையை மூடச் சொல்லி கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். அப்போது, டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இதனை கண்டுக்கொள்ளாமல் டாஸ்மாக் ஊழியர்கள் விறுவிறுப்பாக மதுபானம் விற்பனை செய்துக்கொண்டிருந்தனர்.

டாஸ்மாக்

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அங்கிருந்த காலி பீர் பாட்டில்களை எடுத்து டாஸ்மாக் கடை வாசலில் வீசியெறிந்து உடைத்தனர். இதனைதொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர் மது விற்பனையை நிறுத்திவிட்டு கடையின் இரும்பு ஷட்டரை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர்.இதனைதொடர்ந்து டாஸ்மாக் கடை அருகில் இருந்த மதுபான பாருக்குள் நுழைந்த பெண்கள் அங்கு இருந்த மேசை, நாற்காலி போன்றவற்றை அடித்து நொறுக்கி பாரை சூறையாடினார்கள். அப்போது அங்கு மது குடித்து கொண்டிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதனால் அங்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் போலீசாரிடம் இந்த டாஸ்மாக் கடையில் மது குடிக்க வருபவர்கள் காரணைப்புதுச்சேரி சாலை வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதோடு வரம்பு மீறி நடக்கின்றனர்.

டாஸ்மாக்

எற்கனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆட்சியர் புகார் அளித்தும் இதுவரை டாஸ்மாக் கடையை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு போலீசார் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web