இன்றே கடைகளில் குவியத் தொடங்கிய மதுபானப் பிரியர்கள்... நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை, பார்களுக்கு விடுமுறை!

 
டாஸ்மாக்

நாளை செப்டம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் மிலாதுன் நபி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் விதிகளை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

டாஸ்மாக்

மிலாதுன்நபி தினத்தை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏ)/ எப்எல்3FL3(ஏஏ) முதல் எப்எல்11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். 

டாஸ்மாக்

மிலாதுன் நபி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?