முதல்வர்களின் சொத்து பட்டியல் வெளியனது....பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு... முதல்வர் ஸ்டாலின் 14வது இடம்!

 
 முதல்வர்கள்
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்கிற சொத்து பட்டியலும் கடன் விவரங்களும் வெளியாகி உள்ள நிலையில்  இந்தியாவின் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துக்களுடன் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். கடைசி இடத்தில் மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா உள்ளார். இதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 14வது இடத்தில் இருக்கிறார். 

நாடு முழுவதும் முதல்வர்களின் சொத்துமதிப்பு குறித்த விவரங்களையும், கடன் தொகை குறித்தும் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை வெளியிட்டுள்ளது. 

சந்திரபாபு நாயுடு

அதில் மேற்கு வங்காளத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ள மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்துடன் நாட்டிலேயே ஏழை முதல்வராக கடைசி இடத்தில் இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு ரூ.332 கோடி சொத்துக்களுடன் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் 2வது இடத்தையும், கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.51 கோடிகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மம்தாவுக்கு அடுத்தப்படியாக மிக குறைந்த சொத்து மதிப்பு வைத்திருப்பவாக ஜம்மு காஷ்மீரின் உமர் அப்துல்லா ரூ.55 லட்சத்துடனும், கேரளாவின் பினராயி விஜயன் ரூ.1 கோடியுடன் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.

இந்தியாவின் 31 முதல்வர்களின் (மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்) சராசரி சொத்து மதிப்பு ரூ.52.59 கோடி, இரண்டு முதல்வர்கள் கோடீஸ்வரர்கள். ஒரு முதல்வரின் சராசரி வருமானம், ரூ.13,64,310, 2023-24 நிதியாண்டில் நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,85,854யை விட 7.3 மடங்கு அதிகம்.

சந்திரபாபு நாயுடு

முதல்வர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்தும் ஏடிஆர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 13 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன, 10 பேர் மீது கொலை முயற்சி, கடத்தல், லஞ்சம் மற்றும் கிரிமினல் மிரட்டல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

நாட்டின் 31 முதல்வர்களில் மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜியும், டெல்லியின் அதிஷியும் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பணக்கார டாப் 10 முதல்வர்கள்

1. ஆந்திரா சந்திரபாபுநாயுடு - சொத்து மதிப்பு ரூ.931கோடி ரூ.10 கோடி கடன் உள்ளது.

2. அருணாச்சல் பெமாகாண்டு - சொத்து மதிப்பு  ரூ.332 கோடி ரூ.180 கோடி கடன் உள்ளது.

3. கர்நாடகா சித்தராமையா - சொத்து மதிப்பு ரூ.51 கோடி. ரூ.23 கோடி கடன் உள்ளது.

4. நாகாலாந்து  நெய்புரியோ - சொத்து மதிப்பு ரூ.46 கோடி.  ரூ.8 லட்சம் கடன் உள்ளது.

5.மத்தியபிரதேசம் மோகன்யாதவ் - சொத்து மதிப்பு ரூ.42 கோடி. ரூ.8 கோடி கடன் உள்ளது.

6. புதுச்சேரி ரங்கசாமி - சொத்து மதிப்பு ரூ.38 கோடி. ரூ.1 கோடி கடன் உள்ளது.

7. தெலங்கானா ரேவந்த்ரெட்டி - சொத்து மதிப்பு ரூ.30 கோடி. ரூ.1கோடி கடன் உள்ளது.

8.ஜார்க்கண்ட் ஹேமந்த்சோரன் - சொத்து மதிப்பு ரூ.25 கோடி. ரூ.3 கோடி கடன் உள்ளது.

9.அசாம் ஹிமந்தா பிஸ்வா சர்மா - சொத்து மதிப்பு ரூ.17 கோடி. ரூ.3 கோடி கடன் உள்ளது.

10.மேகாலயா கான்ராட் சங்மா - சொத்து மதிப்பு ரூ.14 கோடி.  ரூ.24 லட்சம் கடன் உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.8,88,75,339 மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ள அதேவேளையில், எந்தக் கடனும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. எனினும், முதல்வர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட வருமானமாக ரூ.28 லட்சம் கிடைக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web