காதலனுடன் லிவிங் டுகெதர்... வேறொருத்தனுடன் திருமணம்... திருமணமான 3 நாளில் எஸ்கேப்... இப்போ ரெண்டு பேருமே ஏத்துக்கலை!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கிழக்கு வலசை பகுதியில் வசித்து வருபவர் ஸ்மிதா. கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் வேலை பார்த்து வந்தார். பட்டதாரியான இவர் தோழிகளுடன் அரட்டை, பேஸ்புக் சாட் என சென்னை வாழ்க்கையில் ஒன்றி ரசித்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை செய்த போது ராமநாதபுரம் பாரதி நகர் கான்சாகிப் நகர் பகுதியில் வசித்து வந்த வசந்தகுமாரை காதலித்தார். இருவரும் லிவிங் டுகெதரில் வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்தனர். அதே நேரத்தில் ஸ்மிதாவின் வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்யவே அதனை வசந்தகுமாரிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். தற்காலிகமாக வீட்டில் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்.. 2, 3 நாட்களில் உனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்வதோடு நம்முடைய காதல் விவகாரத்தை உன் புதிய கணவருக்கும் செல்போனில் அனுப்பி வைத்து விடுகிறேன் எனக் கூறிவிட்டார்.
நான் சொன்னதுமே வீட்டுக்குள் பிரச்சனை ஏற்படும் அதனை சாதகமாக வைத்து நீ வீட்டை விட்டு வெளியே வந்து விடு. உடனடியாக நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதி அளித்தார். இதனையடுத்து வேறொரு இளைஞரை ஸ்மிதா திருமணமும் செய்து கொண்டார். அதே போல் திருமணத்திற்குப் பிறகு குழப்பம் ஏற்பட்டு மீண்டும் வசந்தகுமாரிடமே சென்றார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய போது வசந்தகுமார் சாக்குப் போக்கு சொல்லி அலைக்கழித்தார்.
தனக்கு வீட்டில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருப்பதாக கூறி தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இது குறித்து கேட்டபோது அவர் மற்றும் அவர்களது உறவினர்கள் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டுவதாகவும் ஏற்கனவே ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஸ்மிதா தெரிவித்துள்ளார்.
வசந்த குமார் தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாகவும், தன்னுடன் வாழ உடன்படவில்லை. மீண்டும் வசந்தகுமாருடன் சேர்த்து வைக்க வேண்டும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். மாவட்டம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில், காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அடுத்த கட்டமாக வசந்தகுமாரை அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
காதல் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை காதலித்து லிவிங் டுகதரில் இருப்பவர்கள் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்யலாம். ஒப்புக்கொள்ளவில்லை எனில் சட்டப்படி திருமணமும் செய்து கொள்ளலாம். மற்றொருவர் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் வேறொருவரை திருமணம் செய்து கனவுகளோடு ஸ்மிதாவை மணமுடித்த இளைஞரின் வாழ்வும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் உறவினர்கள் பெரும் வேதனையில் உள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!