பள்ளி குடிநீர் தொட்டியில் பல்லி... மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி!

 
சேலம்
 

 

பள்ளியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 7 மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.சேலம் மாவட்டம் பூமாத்துப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 55 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்கள் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்தனர். பின்னர் தண்ணீர் வராத நிலையில் தொட்டியை திறந்து பார்த்தனர். அப்போது தொட்டியில் இறந்து கிடந்த பள்ளியை பார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து பள்ளி குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 7 மாணவ- மாணவிகளுக்கு வாந்து, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கபட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து குடிநீர் தொட்டி முறையாக சுத்திகரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?