சாம்பாரில் கிடந்த பல்லி... 3 பேர் மருத்துவமனையில் அனுமதி... தொடரும் சோகம்!

 
சாம்பாரில் பல்லி

 தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் சிலர்  காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவரின் இலையில் ஊற்றப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்து வாடிக்கையாளர்  ஓட்டல் ஊழியர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.  

சாம்பாரில் எலி

அதே உணவகத்தில்  உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த விழுப்புரம் ஆசாகுளத்தில் வசித்து வரும் 49 வயது ஆனந்த்,  கண்டாச்சிபுரத்தில் வசித்து வரும் 60 வயது கோவிந்தசாமி, 35 வயது குணசேகர் ஆகியோருக்கு லேசான மயக்கம் ஏற்படுவதாகவும், வாந்தி வருவதாகவும் ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் ஒரு ஆட்டோவில்  ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தகவலின் பேரில் விரைந்து வந்த விழுப்புரம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஸ்டாலின் ராஜரத்தினம் அந்த உணவகத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.  

ஆம்புலன்ஸ்

அத்துடன் உணவகத்துக்கு  2 நாள் விடுமுறை விடப்பட வேண்டும் என அதன் உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.  உணவகத்தில் சமையல் செய்யும் இடம் மற்றும் உணவகத்தின் பின்புற பகுதியை சுகாதாரமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் உணவு சமைக்கும்போது பாதுகாப்பான முறையிலும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்யும்படியும், தவறும்பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web