மே 22ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் திடீர் உத்தரவு!

 
உள்ளூர் விடுமுறை
 

ஆண்டுதோறும் வைகாசி விசாகம் முருகன் ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில்  மே 22ம் தேதி முருகன் ஆலயங்களில் வைகாசி விசாகம் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.  விசாகம் என்பது  ஆறு நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த தினம்.  இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.  

திருச்செந்தூர்

உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது. விசாக நாளில் தான்  மக்கள், விலங்குகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இதன்  கருத்தாகும். இதனால் முருக பக்தர்கள்  இந்நாளில் நோன்பிருத்து கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். அதிலும் முருகனின் அறுபடை வீடுகளில் இந்த நாள் ரொம்பவே விஷேசம்.

திருச்செந்தூர்

அதன்படி திருச்செந்தூர் முருகன் கோவிலும் விசாகம் விமரிசையாக கொண்டாடப்படும். இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் வைகாசி விசாகத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு  மே 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web