லாக்கப் மரணம்... சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

 
அஜித் லாக்கப் சிவகங்கை எஸ்.பி.

சிவகங்கை மாவட்டத்தில், மடப்புரம் கோவில் காவலாளி லாக்கப் மரணத்தைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (28).

கோயிலுக்கு வந்திருந்த பக்தர் கூறிய தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீசார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அப்போது அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஜித்

இந்நிலையில், திருப்புவனம் வாலிபர் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?