உங்க விஜய் ... நா வரேன்... நாளை தொடங்க உள்ள விஜய் பரப்புரைக்கான இலச்சினை வெளியீடு!
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் தொடங்க உள்ளார். இதனையடுத்து தற்போது இந்தப் பிரச்சாரத்தின் இலச்சினையை த.வெ.கவினர் வெளியிட்டுள்ளனர்.
“வாகை சூடும்” வரலாறு திரும்புகிறது #உங்கவிஜய்_நா_வரேன் pic.twitter.com/eJjyoDoSEK
— TVK WORLD (@TVK_WORLD) September 12, 2025
அதில், உங்கள் விஜய் நா வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் பரப்புரை செய்வதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து ஒன்றும் தவெக அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. பேருந்து இன்றே சாலை மார்க்கமாக செல்லும் நிலையில், விஜய் நாளை விமானத்தில் திருச்சி சென்றடைகிறார்.
முதல் கட்ட பிரச்சார பயணத்தின் போது, சனிக்கிழமைகளில் மட்டும் சில நேரங்களில் ஞாயிற்றுக்கிழமை 3 மாதங்களில் 16 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். திருச்சியி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர் மாவட்டங்களைத் தொடர்ந்து பயணத்தை மதுரையில் நிறைவு செய்கிறார். திருச்சியில் பிரச்சாரத்துக்கு 23 கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நடத்தப்படும் எனவும், நேரடியாக மக்களை சந்திப்பதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
