நெகிழ்ச்சி... 12 கிராம பெண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

 
பெண்கள் திருவிழா

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே 2 பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கடவுளாக வழிபடும் வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த வினோத திருவிழாவில் 12 மலை கிராமங்களில் வசித்து வரும் பெண்கள் மட்டுமே பங்கேற்றனர். பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த தொங்குமலை கிராமத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் காளியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் இறுதி நாளில், பெண்கள் மட்டும் பங்கேற்று கும்மியடித்து, குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

அப்போது, மணக்கோலத்தில் இருந்த 2 பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து தெய்வமாக வழிபட்டனர். பெண் குழந்தைகளை வணங்கினால், விவசாயம் செழிக்கும், ஊர் மக்களுக்கு நோய் வராது என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web