நெகிழ்ச்சி.. குற்றால அருவியில் மாற்றுத்திறனாளி நபரை பத்திரமாக குளிக்க வைத்த காவலர்கள்!

 
குற்றால போலீ

கடும் நெரிசலையும் பொருட்படுத்தாமல் குற்றால அருவியில் மாற்றுத்திறனாளியை பாதுகாப்பாக குளிக்க வைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு கோடை விடுமுறையையொட்டி தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், குற்றச்சம்பவங்கள் நிகழாமல் இருக்க எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் போலீஸார் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

மணிமுத்தாறு அருவி

இந்நிலையில் குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க வந்த மாற்றுத்திறனாளியை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பத்திரமாக அழைத்து சென்று பாதுகாப்பான முறையில் அருவியில் குளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து குளிப்பதற்காக அழைத்து சென்றனர்.

கூடி இருந்த கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாற்றுத்திறனாளி நபரை பாதுகாப்பாக குளிக்க உதவிய தென்காசி மாவட்ட காவல்துறையினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web