தமிழகத்தில் தாஜ்மஹால்... இறந்த மனைவிக்கு நினைவிடம் கட்டி, கோயில் எழுப்பிய கணவன்!

 
கோபாலகிருஷ்ணன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர், திருப்பூரில் பனியன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும் கற்பகவல்லி என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு கோமகன் என்ற 5 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில், கற்பகவள்ளி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கல்லீரல் செயலிழந்ததால், 2023ல் இறந்தார். அப்போது கோபாலகிருஷ்ணன், 'உன்னை காப்பாற்ற முடியாவிட்டால், உனக்கு கோவில் கட்டி ஊர் மக்களை அழைத்து கும்பாபிஷேகம் நடத்துவேன்' என்றார். ஓராண்டுக்குப் பிறகு கற்பகவல்லி சமாதியடைந்த இடத்தில் கோபாலகிருஷ்ணன் அவரது திருவுருவப் படத்துடன் கோயில் எழுப்பினார்.

கற்பகவள்ளியின் கணவர் கோபாலகிருஷ்ணனின் இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படங்களில் பார்ப்பது போல் இல்லாமல், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்டியுள்ளார்  கோபாலகிருஷ்ணன். இந்த செயல் பல தம்பதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web