நெகிழ்ச்சி... காட்டுயானைக்கு பலா பழங்களைப் பறித்துப்போட்ட குரங்குகள்!

 
குரங்கு யானை

கோவை மாவட்டத்தில், உயரமாக இருந்த பலா மரத்தில் இருந்து காட்டுயானைக்கு குரங்குகள் பழங்களை பறித்துப்போட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் காட்டுயானைகள் உணவையும், தண்ணீரையும் தேடி அவ்வப்போது இடம்பெயர்ந்து செல்லும். இப்படி இடம்பெயர்ந்து செல்லும் காட்டுயானைகள் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் முகாமிடுவது வழக்கம். அதன்படி வால்பாறை அருகே பழைய வால்பாறை, குரங்குமுடி எஸ்டேட், வரட்டுப்பாறை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.

காட்டு யானை

இந்நிலையில் நேற்று குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டுயானை ஒன்று, அங்குள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள பலா மரங்களில் இருந்து பழங்களை துதிக்கையை உயர்த்தி பறித்து தின்று கொண்டு இருந்தது.

துதிக்கைக்கு எட்டாத உயரத்தில் இருந்த பலாப்பழங்களை பறிக்க முடியாமல் திணறியது. இதை அங்குள்ள பலா மரங்களில் தாவிக் குதித்து விளையாடி கொண்டு இருந்த சிங்கவால் குரங்கு கூட்டம் கவனித்தது. பின்னர் காட்டுயானை பழங்களை பறிக்க முயற்சிக்கும் பலா மரத்துக்கு வந்தது. தொடர்ந்து மரத்தில் இருந்த பலாப்பழங்களை ஒவ்வொன்றாக பறித்து கீழே போட்டது.

யானை

அந்த பலாப்பழங்களை காட்டுயானை ருசித்து தின்றது. இந்த காட்சியை தேயிலை தோட்டத்தில் பணியாற்றிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த தொழிலாளர்கள் கண்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அதனை மானாம்பள்ளி வனத்துறையினரும் கண்டு ரசித்தபடி அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?