நெகிழ்ச்சி... மில் வேலைக்கு வந்தவர்களை பட்டதாரிகளாக மாற்றிய முதலாளி!

 
படிக்க வைத்த முதலாளி

தங்களது குடும்பத்தின் வறுமை காரணமாக பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மில் வேலைக்கு, தங்களது மகள்களை அனுப்பிய பெற்றோர், மில் முதலாளியின் செயலால் நெகிழ்ந்து நன்றி கூறுகின்றனர். தன்னுடைய மில்லில் வேலைக்கு சேர்ந்த பெண்களை, மில் உரிமையாளர், படிக்க வைத்து, அனைவரையும் பட்டம் பெற வைத்துள்ள சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, 9,776 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற சிலர், வேலைக்கு சென்ற படியே படித்து பட்டம் பெற்றுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கு சென்று படித்து பட்டம் பெற்ற மாணவிகள்

இந்நிகழ்வில், கோவையில் செயல்பட்டு வரும் கேபிஆர் நிறுவனத்தில் பணியாற்றியபடியே பட்டம் பெற்ற 3 மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர். குடும்ப வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத நிலை உருவானதால், மில் பணியில் இணைந்ததாக தெரிவித்த அவர்கள், பணியில் இருந்தபடியே படித்து தற்போது பட்டம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வேலைக்கு சென்று படித்து பட்டம் பெற்ற மாணவிகள்

பணிக்கு சென்றாலும், படிப்பை தொடர வாய்ப்புள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பட்டம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் ஐஸ்வர்யா, திவ்யா, முத்துலட்சுமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web