நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி.. கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி பயங்கர விபத்து!
தருமபுரி மாவட்டம் தோப்பூர் அருகே கட்டமேடு என்ற பகுதியில் காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட கார் திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதன் மீது லாரி மோதியதில், காரில் இருந்த வில்லியம் ராஜ் என்பவர் உயிரிழந்தார். 2 பெண்கள் உள்பட 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய கார் முற்றிலும் சேதமடைந்ததால், கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்தை ஏற்படுத்திய லாரி நெல் மூட்டையை ஏற்றிச் சென்றதாகவும், வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தால் சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!