கோடிக்கணக்கில் நஷ்டம்... 1000க்கும் மேற்பட்ட லாரிகள் சிக்கித் தவிப்பு... ஜம்மு-காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் கதறும் வியாபாரிகள்!
ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீரில் தொடர்மழை மற்றும் பெருவெள்ளம், நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தேசிய நெடுஞ்சாலை கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டு இருப்பதால் பழ வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் கோடிக்கணக்கான ஆப்பிள் மற்றும் பேரிக்காய்களை ஏற்றிச் சென்ற 1000க்கும் மேற்பட்ட லாரிகள் வெள்ளத்தால் மேற்கொண்டு செல்ல முடியாமல் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கித் தவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியாவின் பிறபகுதிகளுடன் காஷ்மீரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முகல் சாலை திறந்து இருந்தாலும், அந்தச் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.

தற்போது காஷ்மீரில் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் பருவக்காலம் நிலவும் சூழலில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு இருப்பதால் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு லாரியும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் மதிப்பிலான பழங்களை ஏற்றிச் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
