ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு... போலீஸ் ஏட்டு தற்கொலை!

 
புகழேந்தி

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.25 லட்சம் இழந்த போலீஸ் ஏட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக பொதுமக்கள் பலரும் ஆன்லைன் மூலமாக தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டு, சைபர் க்ரைம், ஆன்லைன் பங்கு சந்தை முதலீடு என்று லட்சங்களை பறிகொடுத்த மக்கள், மன உளைச்சலில் தற்கொலை முடிவைத் தேடுகின்றனர். ஆனால், தற்கொலை இதற்கான தீர்வாக அமையாது. அரசும் இது குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தாமல் இருந்து வருவது பெரும் சோகம்.

தஞ்சாவூர் அருகே வெள்ளம்பேரம்பூரைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 43). திருமணமாகி பிரம்மவித்யா (37) என்ற மனைவியும், புஷ்பசாந்தா (14) என்ற மகளும், சாந்தகுமார் (12) என்ற மகனும் உள்ளனர். புகழேந்தி மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டு போலீஸாக பணியாற்றி வந்தார். கடன் பிரச்னையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஆன்லைனில் ரம்மி விளையாடி 25 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று அவர் எலி மருந்தை விழுங்கி மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொலை

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்னையில் காவலர் ஒருவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web