லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை!

 
மார்ட்டின்

லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் லட்டாரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா, சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் மார்ட்டின் லாட்டரி  சீட்டுக்களை விற்பனைச் செய்து வருவதாகவும், அதன் மூலம் கிடைத்த வருவாயை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019ல் மார்ட்டினுக்கு தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அப்போது வருமான வரித்துறை தெரிவித்திருந்தனர். 

மார்ட்டின்

கடந்த 2009 - 2010 காலக்கட்டத்தில் சிக்கிம் மாநிலத்தில் விதிகளை மீறி லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தது மூலமாக ரூ.910 கோடி வரை வருவாய் ஈட்டியதாகவும், அந்த பணத்தை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் வருமான வரித்துறையினர் அப்போது மார்ட்டின் மீது குற்றம் சாட்டியிருந்தனர். இதுதொடர்பாக மார்ட்டின் மீதும், அவரது பங்குதாரர் ஜெயமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் இன்று அமலாக்கத்துறையினர் கோவை மற்றும் சென்னையில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்ட்டின்

இன்று காலை முதல் சென்னை போயஸ் கார்ட்டன் பகுதியில் உள்ள கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டினின் வீடு மற்றும் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வீடு மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜூன் அலுவலகம் உள்பட 3க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு குறித்தான விவரம் தெரியவரும். காலையில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசாருடன் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web