லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்... திமுக அதிர்ச்சி!

 
லாட்டரி மார்ட்டின்

தென்னை மரத்துக்கும் பனை மரத்துக்கும் இடையே என்ன சம்பந்தம்? என்கிற கேள்வி எல்லாம் இல்லை... லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.457 கோடி  மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் கடந்த இரு தினங்களாக நடைப்பெற்ற சோதனைக்குப் பின்னர் முடக்கி உள்ளனர். திமுகவின் அனுதாபி என்று அடையாளம் காணப்பட்டவர் மார்ட்டின். கலைஞர் காலத்தில், செம்மொழி மாநாட்டுக்கு செலவழித்தது, கலைஞர் வசனத்தில் படம் தயாரித்தது என ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், தேர்தலுக்கு பிறகும் திமுகவினரின் அனுதாபியாகவும், செலவழிக்கும் நபராகவும் வலம் வந்தவர் மார்ட்டின். இந்நிலையில், மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த இரு தினங்களாக சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் லட்டாரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா, சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் மார்ட்டின் லாட்டரி  சீட்டுக்களை விற்பனைச் செய்து வருவதாகவும், அதன் மூலம் கிடைத்த வருவாயை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019ல் மார்ட்டினுக்கு தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அப்போது வருமான வரித்துறை தெரிவித்திருந்தனர். 

மார்ட்டின்

கடந்த 2009 - 2010 காலக்கட்டத்தில் சிக்கிம் மாநிலத்தில் விதிகளை மீறி லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தது மூலமாக ரூ.910 கோடி வரை வருவாய் ஈட்டியதாகவும், அந்த பணத்தை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் வருமான வரித்துறையினர் அப்போது மார்ட்டின் மீது குற்றம் சாட்டியிருந்தனர். இதுதொடர்பாக மார்ட்டின் மீதும், அவரது பங்குதாரர் ஜெயமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறையினர் கோவை மற்றும் சென்னையில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். 

மார்ட்டின்

 சென்னை போயஸ் கார்ட்டன் பகுதியில் உள்ள கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டினின் வீட்டிலும் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகம், அவரது மருமகன் ஆதவ் அர்ஜூன் அலுவலகம் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டதில், சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web