காதல் விவகாரம்.. சமாதானம் பேச சென்ற இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. பிரபல ரவுடி கைது!

 
அஸ்வின்

சென்னை புழல் புத்தகரம் மதுர மேட்டூர் சூரப்பட்டு சாலையில் வசிப்பவர் துர்கேஷ் (27). இவரது நண்பர் தினேஷ். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதே பெண்ணை புழல் புத்தகரத்தை சேர்ந்த சாமிநாதனும் காதலித்ததாக தெரிகிறது. அதனால் தினேஷ், சாமிநாதன் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் பெண் குறித்து பேசுவதற்காக தினேஷை புழல் விநாயகபுரத்திற்கு சாமிநாதன் அழைத்துள்ளார். இதனால் தினேஷ் தனது நண்பர் துர்கேஷை அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அப்போது தினேசுக்கும், சாமிநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இருவரையும் சமாதானம் செய்திருக்கிறார் துர்கேஷ். இந்நிலையில், சாமிநாதனின் நண்பர்கள் அஷ்வின்குமார், எபினேசர் ஆகியோர் துர்கேஷை கைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கிவிட்டு தப்பியோடினர். காயமடைந்த துர்கேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், கோயம்பேடு பகுதியை சேர்ந்த சாமிநாதன், அஷ்வின்குமார், புத்தகரத்தை சேர்ந்த எபினேசர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் தினேஷ்குமாருக்கும், சாமிநாதனுக்கும் பெண்ணை காதலிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. கலந்துரையாடலின் போதே இந்த கொலைவெறி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட அஸ்வின் குமார் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. மேலும் புழல் காவல் நிலைய கொள்ளையர்கள் பட்டியலில் அஸ்வின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!