வகுப்பு தோழனுடன் காதல்... வெறுப்பில் 16 வயது மாணவிக்கு உறவினருடன் கட்டாய கல்யாணம் செய்து வைத்த பெற்றோர்!

 
கல்யாணம்

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தனது மகள், வகுப்பில் ஒன்றாக படிக்கும் மாணவன் மீது காதல் வயப்பட்டது தெரிய வந்ததால், ஆத்திரத்தில் 16 வயது மாணவிக்கு தனது சகோதரியின் மகனுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். சிறுமியை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரிய ஏரி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 11ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பெண் அதே பள்ளியில் படிக்கும் ஒருவரை காதலிப்பதாக தெரிகிறது. இதனால், சிறுமியின் தந்தை கடந்த 13ம் தேதி சிறுமியை சென்னை வியாசர்பாடியில் உள்ள தனது மூத்த சகோதரி வீட்டிற்கு அழைத்து வந்தார்.

5வது திருமணம்

பின்னர், இவரது சகோதரி மகன் அஜித்குமாருக்கும் (26) கடந்த 15ம் தேதி வியாசர்பாடி பிவி காலனியில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. ஆனால் அஜித்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குழந்தைகள் நல அலுவலர் ஸ்டெல்லா வந்து விசாரணை நடத்தினார்.

பின்னர் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரின் பெற்றோர், தாத்தா, பாட்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!